சினிமா

விஜயகாந்தை சந்தித்த கையோடு முதல்வர், துணை முதல்வரை சந்தித்த யோகி பாபு..! என்ன காரணம் தெரியுமா.?

Summary:

Actor yogi babu invite CM And deputy CM for reception

தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் யோகி பாபு, ரஜினி, விஜய் என தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களின் படங்களில் முன்னணி காமெடியனாக நடித்துவருகிறார் யோகிபாபு. இந்நிலையில் இவருக்கும் பார்கவி என்ற பெண்ணுக்கும் கடந்த மாதம் குலதெய்வ கோவிலில் வைத்து எளிமையான முறையில் திருமணம் நடைபெற்றது.

திருமணத்தில் மணமகன், மணமகளின் குடும்பத்தார் மற்றும் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்துகொண்டனர். திருமண வரவேற்பு விரைவில் வைப்பதாக யோகி பாபு தெரிவித்திருந்தார். இந்நிலையில், அடுத்த மாதம் 5 ஆம் தேதி  தனது திருமண வரவேற்பு நிகழ்ச்சியை நடத்த திட்டமிட்டுள்ளார்.

இந்நிலையில், தனது திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்துகொள்ளுமாறு தேமுதிக தலைவர் விஜயகாந்த் அவர்களை நேரில் சந்தித்து சமீபத்தில் அழைப்பிதழ் கொடுத்தார் யோகிபாபு. இதனை அடுத்து, இன்று தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தை நேரில் சந்தித்து அழைப்பிதழ் கொடுத்துள்ளார் யோகிபாபு.


Advertisement