நடிகர் விஜயின் டாப் ஐந்து மரண மாஸ் மெகா ஹிட் திரைப்படங்கள்! எவை எவைனு தெரியுமா?

நடிகர் விஜயின் டாப் ஐந்து மரண மாஸ் மெகா ஹிட் திரைப்படங்கள்! எவை எவைனு தெரியுமா?


Actor vijay top five hit movies list

தமிழ் சினிமாவில் தனக்கென தனி இடத்தை பிடித்து மக்கள் மத்தியில் பெரிய செல்வாக்கை பிடித்திருப்பவர் நடிகர் விஜய். நாளைய தீர்ப்பு என்ற திரைப்படம் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகி இன்று சர்க்கார் அமைக்கும் அளவிற்கு வளர்ந்து நிற்கிறார் நடிகர் விஜய்.

நடிகர் விஜயின் இந்த வளர்ச்சி ஒரு வருடத்திலோ அல்லது ஒரே படத்திலோ வந்தது இல்லை. பல்வேறு முயற்சி, தோல்வி இவற்றையெல்லாம் கடந்துதான் நடிகர் விஜய் வளர்ந்து வந்திருக்கிறார். அவ்வாறு அவரது வளர்ச்சிக்கு காய் கொடுத்த டாப் ஐந்து மாபெரும் வெற்றிப்படங்கள் பற்றித்தான் நாம் இங்கே பார்க்க உள்ளோம்.

vijay

5. கத்தி
இயக்குனர் முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து மெகா ஹிட் ஆனா திரைப்படம்தான் கத்தி. விவசாயிகளின் நலனில் அக்கறை கொண்டு அவர்களின் கஷ்டங்களையும் தேவைகளையும் பற்றி பேசியிருக்கும் கத்தி திரைப்படம் விஜயின் வெற்றிப்படங்களில் முக்கியமான ஓன்று.

4. துப்பாக்கி
நடிகர் விஜய் மற்றும் இயக்குனர் முருகதாஸ் இருவரும் இணைந்த முதல் படம் துப்பாக்கி. பாக்ஸ் ஆபிசில் மாபெரும் சாதனையை படைத்தபடம் துப்பாக்கி. இந்திய ராணுவத்தில் வேலைபார்க்கும் விஜய் தனது விடுமுறைக்கு வீட்டிற்கு வரும்போது அவர் எதிர்கொள்ளும் தீவிரவாத அச்சுறுத்தலையும், ஸ்லீப்பர் செல் என்ற கதையையும் மையமாக கொண்டு உருவாகியிருக்கும் படம் துப்பாக்கி. துப்பாக்கி படம் தமிழ் சினிமாவில் மாபெரும் வெற்றிப்படம் ஆகும்.

vijay

3. போக்கிரி
இயக்குனர் பிரபுதேவா இயக்கத்தில் காவல் துறை அதிகாரியாக விஜய் நடித்த போக்கிரி திரைப்படம் விஜயின் வெற்றிப்படங்களில் தனித்துவமான ஓன்று. படத்தின் பாடல்களும் மாபெரும் வெற்றிபெற்றது.

vijay

4. கில்லி
இயக்குனர் தரணி இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான திரைப்படம் கில்லி. விஜய்க்கு வில்லனாக நடிகர் பிரகாஷ்ராஜ் இந்த திரைப்படத்தில் நடித்திருப்பார். இந்த படத்தில் பேசப்பட்ட வசனங்கள் இருவரை மிகவும் பிரபலம். நடிகர் விஜய் மிகவும் எதார்த்தமாக நடிப்பு, வசனம், நடனம் என அனைத்திலும் தனது முழு திறமையையும் காட்டிய படம் என்றால் அது கில்லி படமென்று சொல்லலாம்.

5. பூவே உனக்காக
நடிகர் விஜயின் வாழ்க்கையில் மிகவும் முக்கியமான திரைப்படம், அவரது சினிமா பயணத்தின் மிகப்பெரிய திருப்பு முனையாக அமைந்த திரைப்படம் என்றால் அது பூவே உனக்காக திரைப்படம்தான். காதல், செண்டிமெண்ட் என அனைத்திலும் பின்னி பெடெலெடுத்திருப்பர் தளபதி விஜய். 

vijay