சினிமா

நடிகர் விஜய் கலந்துகொண்ட திருமண நிகழ்ச்சியில், போலீஸ் தடியடி ! காயத்துடன் வீடு திரும்பினார் விஜய்.

Summary:

actor vijay-marriage function-pondichery

நடிகர் விஜய் சினிமாவில் பிசியாக இருந்தாலும் தனது ரசிகர்களை தக்கவைத்து கொள்வதிலும் கவனமா இருக்கிறார். இதை நிரூபிக்கும் விதமாக நேற்று ஒரு நிகழ்வு நடைபெற்றுள்ளது. தற்சமயம் விஜய் ரசிகர் மன்றத்தின் அகில இந்திய தலைவராக இருப்பவர் ஆனந்த்.

இவர் புதுச்சேரி சட்டமன்ற தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ. வான இவர் தனது மகள் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு புதுச்சேரியை அடுத்த நாவற்குளம் சங்கமித்திரா திருமண மண்டபத்தில் நேற்று மாலை ஏற்பாடு செய்திருந்தார்.

நடிகர் விஜய் தனது மனைவி சங்கீதாவுடன், இந்நிகழ்ச்சில் கலந்து கொள்ள மண்டபத்துக்கு வந்தார். இதையடுத்து மணமேடை வந்த விஜய், மணமக்களை வாழ்த்தி, பரிசு வழங்கினார். அப்போதும் பலர் விஜய்யை காண வேண்டும் என்ற ஆர்வத்தால் மணமேடையில் ஏறினர்.  இதனால் மணமேடை முழுவதும் கூட்டம்  அலைமோதியது  விஜய்யும், அவரது மனைவியும் செய்வது அறியாது திகைத்தனர். பவுன்சர்ஸ் எனப்படும் பாதுகாப்பு வீரர்களும் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் திணறினர்.

விஜயின் காலில் சிறிதாக காயம் எற்பட்டது , மனைவி சங்கீதாவின் தோல் மீது கைபோட்டு, மிகுந்த  சிரமத்துக்கு இடையே மண்டபத்தில் இருந்து வெளியேறினார். மணடபத்துக்கு வெளியேயும் ரசிகர்கள் ரகளையில்  ஈடுபட்டதால் போலீசார் தடியடி நடத்தி, அவரை பாதுகாப்பாக  காரில் அனுப்பி வைத்தனர்.


Advertisement