லியோ திரைப்படத்தின் படப்பிடிப்புகள் அனைத்தும் அதிகாரப்பூர்வ நிறைவு; லோகேஷ் கனகராஜ் அறிவிப்பு.!



Actor Vijay Leo Movie Wrap Lokesh Kanagaraj Tweet Says 

 

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், நடிகர்கள் விஜய், திரிஷா, சஞ்சய் தத், நிவின் பாலி, அர்ஜுன் தாஸ், பகத் பாசில், மிஸ்கின், அர்ஜுன், ஜியார்ஜ் மரியான், சாண்டி மாஸ்டர் உட்பட பலர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் லியோ. 

ரூ.300 கோடி செலவில், 7 ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், அனிரூத் ரவிச்சந்தர் இசையில் படம் தயாராகியுள்ளது. படம் 19 அக் 2023 அன்று திரையரங்கில் வெளியாகிறது. 

actor vijay

இந்நிலையில், கடந்த 6 மாதமாக 125 நாட்கள் நடைபெற்று வந்த படப்பிடிப்பு பணிகள் அனைத்தும் முற்றிலும் நிறைவடைந்துள்ளன. இந்த தகவலை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள இயக்குனர் லோகேஷ் கனகராஜ், தனது குழுவில் இடம்பெற்ற அனைவர்க்கும் நன்றிகளை தெரிவித்து இருக்கிறார்.