தமிழ் சினிமாவில் மேலும் ஒரு பிரபலம் மரணம்!! நடிகர் வெங்கட் சுபா கொரோனாவால் மரணம்..

தமிழ் சினிமாவில் மேலும் ஒரு பிரபலம் மரணம்!! நடிகர் வெங்கட் சுபா கொரோனாவால் மரணம்..



Actor venkat subha passed away due to corona

பிரபல சினிமா மற்றும் சீரியல் நடிகரான வெங்கட் சுபா அவர்கள் கொரோனா தொற்றால் காலமானார்.

பல திரைப்படங்களிலும், சின்னத்திரை சீரியல்களிலும் குணச்சித்திர வேடங்களில் நடித்து பிரபலமானவர் வெங்கட் சுபா எனப்படும் வெங்கட கிருஷ்ணன். கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேல் சினிமா துறையில் பல வடிவங்களில் பணியாற்றி வந்துள்ளார். இவர், டூரிங் டாக்கீஸ் யூடியூப் சேனலில் படங்களை விமர்சனம் செய்துவந்தவர்.

Venkat Subha

சினிமா, சீரியல், திரைவிமர்சனம் என பல துறைகளில் கலக்கிவந்த நடிகர் வெங்கட் சுபா அவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைபெற்றுவந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் இன்று உயிரிழந்தார். அவருக்கு தற்போது வயது 60.

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் திருமகள் தொடரில் கடைசியாக நடித்துவந்தார். தற்போது இவரது மறைவுக்கு சினிமா பிரபலங்கள் பலரும் தங்கள் இரங்கலை தெரிவித்துள்ளனர்.