சினிமா

தனது அம்மாவின் புகைப்படத்துடன், மிகவும் உருக்கமாக நடிகர் சுஷாந்த் வெளியிட்ட கடைசி பதிவு! கண்கலங்கும் ரசிகர்கள்!

Summary:

Actor sushanth last post in instagram

பாலிவுட்டில் கை போ சே என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத். அதனைத் தொடர்ந்து ஏராளமான திரைப்படங்களில் நடித்த அவர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று பெருமளவில் பிரபலமானார். பின்னர் இந்திய கிரிக்கெட் வீரர் தல தோனியின் வாழ்க்கை வரலாற்று திரைப்படத்தில் நடித்ததன் மூலம் இந்தியளவில் மேலும் பிரபலமானார். 

இந்நிலையில் சுஷாந்த் சிங் ராஜ்புத் நேற்று மும்பையில் பாந்த்ரா பகுதியில் உள்ள அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். மேலும் அவர் மனஅழுத்தத்தின் காரணமாக தற்கொலை செய்து கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. இவரது இந்த திடீர் மரணம் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  மேலும் பலரும் அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

 இந்நிலையில் தனது 16 வயதில் தாயை இழந்த சுஷாந்த் அம்மாவின் மீது மிகுந்த பாசம் கொண்டவர். இவர் அடிக்கடி தனது தாய்க்கு கடிதம் எழுதுவதை வழக்கமாக வைத்துள்ளார்.  இவ்வாறு சுஷாந்த் கடைசி பதிவாக கடந்த வாரம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், தாயின் புகைப்படத்தை வெளியிட்டு கடிதம் ஒன்றை வெளியிட்டிருந்தார்.

அதில் அவர், தெளிவில்லாத கடந்தகாலம் கண்ணீர் துளியில் இருந்து ஆவியாகிறது. முடிவில்லா கனவுகள் புன்னகையின் வளைவை செதுக்குகின்றன. மற்றும் விரைவான வாழ்க்கை இரண்டிற்கும் இடையே பேச்சுவார்த்தை நடத்துகிறது என வேதனையுடன் பதிவிட்டுள்ளார்.


Advertisement