குடும்பத்துடன் குதூகலமாக ஊர்சுற்றும் சூர்யா - ஜோதிகா.! கூலான போட்டோஸ் வைரல்.!!



 Actor Surya Jyothika Travelling World Countries 

 

தமிழ் சினிமாவில் நட்சத்திர ஜோடிகளாக திகழ்பவர்கள் நடிகர் சூர்யா - நடிகை ஜோதிகா. இவர்கள் திருமணம் செய்து பல வருடங்கள் கடந்தாலும், இவர்களின் காதல் மாறவில்லை. 

ஒருபுறம் சூர்யா சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து வரும் நிலையில், மறுபுறம் ஜோதிகாவும் கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். 

இவர்கள் எங்கு சென்றாலும் ஒன்றாகவே சென்று வருகின்றனர். தற்போது சிவா இயக்கத்தில் வரலாற்று கதைகளத்தை மையமாகக் கொண்ட கங்குவார் படத்தில் சூர்யா நடித்து வருகிறார். 

இந்த படம் அடுத்த ஆண்டில் ரிலீஸ் ஆக இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில், தற்போது சூர்யா மற்றும் ஜோதிகா இருவரும் வெளிநாட்டில் குடும்பத்துடன் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளனர். 

இதற்கான வீடியோவை ஜோதிகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள நிலையில், இந்த புகைப்படங்கள் ரசிகர்களால் ஷேர் செய்யப்பட்டு வருகின்றன.