இந்த குட்டி சிறுவன் எந்த முன்னணி நடிகர் தெரியுமா.?! வைரலாகும் புகைப்படத்தால் ரசிகர்கள் ஆச்சரியம்..



Actor surya childhood photos

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக இருந்து வருபவர் சூர்யா. இவர் தமிழில் 90களில் காலகட்டங்களில் இருந்து தற்போது வரை தொடர்ந்து நடித்து வருகிறார். தனது நடிப்பு திறமையின் மூலம் ரசிகர்களை கவர்ந்த சூர்யா தனக்கென தனி இடத்தை தமிழ் சினிமாவின் நிலைநாட்டி இருக்கிறார்.

surya

இவர் நடிப்பில் வெளியான காக்க காக்க, பிதாமகன், ஏழாம் அறிவு, பேரழகன், கஜினி, சில்லுனு ஒரு காதல், வாரனம் ஆயிரம், சிங்கம், போதி தர்மன், ஜெய் பீம், சூரரைப் போற்று போன்ற பல வெற்றி திரைப்படங்களில் நடித்த முன்னணி நடிகராக பெயர் பெற்றுள்ளார்.

இவ்வாறு சினிமாவில் பிஸியாக இருந்து வரும் நடிகர் சூர்யா, நடிகை ஜோதிகாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரு குழந்தைகள் இருந்து வருகின்றனர்.

இது போன்ற நிலையில், நடிகர் சூர்யா தற்போது இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் 'கங்குவா' திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

surya

மேலும் தற்போது நடிகர் சூர்யாவின் சிறுவயது புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. இப்புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் இந்த குட்டி பையன் சூர்யாவா என்று ஆச்சரியத்தில் கமெண்ட் செய்து வருகின்றனர்.