காமெடி நடிகர் சூரி இப்படிபட்ட மனிதரா.!வெளியான வீடியோவால் அதிர்ச்சியில் ரசிகர்கள்.?

காமெடி நடிகர் சூரி இப்படிபட்ட மனிதரா.!வெளியான வீடியோவால் அதிர்ச்சியில் ரசிகர்கள்.?



Actor soori got appreciated for his action

2003ம் ஆண்டு "வின்னர்" படத்தில் ஒரு சிறிய காமெடி கதாப்பாத்திரத்தில் அறிமுகமானவர் சூரி. அதன் பின்னர் 2009ம் ஆண்டு "வெண்ணிலா கபடிக் குழு" திரைப்படத்தில் நடித்து பிரபலமானார். அந்த படத்தில் பரோட்டா சாப்பிடும் காட்சியில் நடித்து பரோட்டா சூரி என்று அழைக்கப்படுகிறார்.

Soori

தொடர்ந்து இவர் சுந்தர பாண்டியன், வருத்தப்படாத வாலிபர் சங்கம், பாண்டிய நாடு, ஜில்லா, ரஜினி முருகன் ஆகிய படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் வெளியாகி வெற்றியடைந்த "விடுதலை" திரைப்படத்தில் சூரி கதாநாயகனாக நடித்திருந்தார்.

தற்போது இயக்குனர் செந்தில் குமார் இயக்கத்தில் ஒரு பெயரிடப்படாத திரைப்படத்தில் கதாநாயகனாக சூரி நடித்து வருகிறார். இந்நிலையில், ஷூட்டிங்கிற்காக சென்ற இடத்தில், அங்குள்ள சிறுவர்கள் கேரவனைச் சுற்றிப் பார்க்க ஆசைப்பட்டு சூரியிடம் கேட்கிறார்கள். 

Soori

அதற்கு சூரி " உள்ளே என்ன இருக்கிறது?" என்று கேட்க, அதற்கு சிறுவர்கள் "பெட் ரூம்" என்று சொல்வதைக் கேட்டு ஷாக் ஆன சூரி, "உள்ளே இருப்பது மேக்கப் ரூம் என்று சொல்லி உள்ளே அழைத்து சென்று காட்டுகிறார்" இந்த வீடியோவைப் பார்த்த பலரும் சூரியை பாராட்டி வருகின்றனர்.