சினிமா

விஜய் வேண்டாம் என மறுத்த டாப் இயக்குனரின் கதைக்கு ஓகே சொன்னாரா இந்த பிரபல நடிகர்? தீயாய் பரவும் தகவல்!

Summary:

நடிகர் சிவகார்த்திகேயன் விஜய் மறுத்த கதையில் நடிக்க ஓகே சொல்லியுள்ளதாக தகவல்கள் பரவி வருகிறது.

தமிழ் சினிமாவில் ஏராளமான ஹிட் படங்களை கொடுத்து முன்னணி இயக்குனராக இருப்பவர் ஏ.ஆர் முருகதாஸ். இந்நிலையில் தளபதி 65 வது படத்தை ஏ ஆர் முருகதாஸ் இயக்கவிருப்பதாக தகவல்கள் வெளிவந்தது. ஆனால் ஒரு சில காரணங்களால் நடிகர் விஜய் இயக்குனர் முருகதாஸின் கதையை கைவிட்டு, அடுத்தடுத்தாக நெல்சன் இயக்கத்தில் நடிக்க உள்ளார்.

இந்த நிலையில் ஏ.ஆர் முருகதாஸ் நடிகர் சிவகார்த்திகேயனை தொடர்பு கொண்டு நடிகர் விஜய்க்கு கூறிய அதே கதையை கூறியதாகவும், அதனை கேட்டதும் சிவகார்த்திகேயன் நடிக்க சம்மதம் தெரிவித்ததாகவும் தகவல்கள் பரவி வருகிறது.

சிவகார்த்திகேயன் நடிப்பில் அடுத்ததாக டாக்டர் திரைப்படம் ரிலீசுக்கு தயாராக உள்ளது. மேலும் அதனைத் தொடர்ந்து அயலான் திரைப்படமும் கைவசம் உள்ளது. இந்த நிலையில் நடிகர் முருகதாஸ் உடன் கூட்டணி குறித்த அதிகாரபூர்வ தகவல்கள் எதுவும் வெளிவரவில்லை. இதற்கு முன் ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் மான் கராத்தே திரைப்படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Advertisement