அட.. சூப்பரு! செம வருத்தத்தில் இருந்த ரோஜா சீரியல் ரசிகர்களுக்கு ஹேப்பியான நியூஸ்! என்னனு தெரியுமா??

அட.. சூப்பரு! செம வருத்தத்தில் இருந்த ரோஜா சீரியல் ரசிகர்களுக்கு ஹேப்பியான நியூஸ்! என்னனு தெரியுமா??


actor-sippu-suryan-not-releaving-from-roja-serial

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்களை பெருமளவில் கவர்ந்து வரும் தொடர் ரோஜா. இந்த தொடரில் ஹீரோவாக அர்ஜுன் கதாபாத்திரத்தில் சிப்பு சூர்யன், மற்றும் ஹீரோயின் ரோஜாவாக பிரியங்கா நல்காரி ஆகியோர் நடித்து வருகின்றனர். இந்த தொடருக்கு எனவே ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.

 இந்த நிலையில் சில தினங்களுக்கு முன்பு ஹீரோ சிப்பு சூரியன் ரோஜா தொடரிலிருந்து விலகபோவதாகவும், ஆகஸ்ட் மாதம் வரையே தொடரில் நடிக்கவிருப்பதாகவும் அறிவிப்பு வெளியிட்டார். இது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் இந்த முடிவை ஏற்றுக்கொள்ள மறுத்து ரசிகர்கள் பலரும் வருத்தம் தெரிவித்தனர்.

இந்த நிலையில் இதுகுறித்து தற்போது சிப்பு சூரியன் புதிய பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர், கடந்த இரு நாட்களாக ரசிகர்களிடம் இருந்து ஏராளமான போன் கால்கள், போஸ்ட்கள், மெசேஜ்கள், ஹேஸ்டாக்குகள் என தொடர்ந்து வந்து கொண்டே உள்ளது. என் மீது நீங்கள் காட்டும் அளவற்ற அன்பிற்கு நன்றி. உங்களின் அனைவரது கோரிக்கையையும் ஏற்று ரோஜா சீரியலில் உங்களின் ஃபேவரைட் அர்ஜுன் சாராக தொடர்வது குறித்து யோசிக்கிறேன். சீரியலில் இருந்து விலகும் முடிவை மறுபரிசீலனை செய்கிறேன் என கூறியுள்ளார். இது ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.