சிம்புவிற்கும் பிரபல நடிகைக்கு காதலா.! நடிகையின் பேட்டியால் பரபரப்பு.?

சிம்புவிற்கும் பிரபல நடிகைக்கு காதலா.! நடிகையின் பேட்டியால் பரபரப்பு.?


Actor simbu love with his movie actress

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வருபவர் சிம்பு. இவர் 90களின் ஆரம்பங்களில் இருந்து தற்போது வரை தொடர்ந்து நடித்து வருகிறார். தனது தந்தையின் மூலம் சினிமா துறையில் காலடியெடுத்து வைத்த சிம்பு தற்போது முன்னணி நடிகராக தனது நடிப்பு திறமையின் மூலம் உயர்ந்துள்ளார்.

simbu

மேலும் தனது நடிப்பு திறமையின் மூலம் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்து தனக்கென தனி இடத்தை தமிழ் சினிமாவில் நிலைநாட்டியிருக்கிறார் சிம்பு. இதன்படி இவர் நடிக்கும் திரைப்படங்களின் கதாநாயகிகளுடன் இணைத்து அடிக்கடி கிசுகிசுக்கபடுவார் சிம்பு.

மேலும் சிம்பு, நயன்தாரா, ஹன்சிகா போன்ற பலருடன் காதலில் இருந்து பின்பு காதல் முடிவு ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது சிம்பு நடிப்பில் வெளியான 'வெந்து தனிந்தது காடு' திரைப்படத்தில் நடித்த சித்தி இத்னானியுடன் கிசுகிசுக்கப்பட்டு வருகிறார்.

simbu

இது போன்ற நிலையில், தற்போது சித்தி இத்னானி சமீபத்தில் அளித்த பேட்டியில் இது குறித்து பேசியிருக்கிறார். அவர் கூறியதாவது, "சினிமா துறையில் வந்து விட்டால் கிசுகிசுக்கள் வருவது சகஜம். இதை எல்லாம் நான் கண்டு கொள்வதில்லை. உண்மை இல்லாத விஷயத்தைப் பற்றி நான் ஏன் பேச வேண்டும்" என்று கூறியிருக்கிறார். இப்பேட்டி தற்போது வைரலாகி வருகிறது.