'வாடா, போடா' சுற்றுலா பயணிகளை ஒருமையில் பேசியதாக புகார்.. வைரலாகும் வீடியோ.!



Viral Video Shows Forest Officer Yelling at Tourists in Tamil Nadu: ‘Vada, Poda’ Incident Sparks Outrage

அரசு அதிகாரிகள் மீது குற்றசாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு நபரும் வரும் முழுவதும் ஓடோடி உழைத்தாலும், பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கப்படும் நாட்கள் மற்றும் சீசன் சமயங்களில் சுற்றுலா சென்று வருவது வழக்கமான ஒன்று. இவ்வாறான சுற்றுலா மனஅமைதிக்காக இருந்தாலும், ஒருசில நேரங்களில் அனைத்தும் நாம் எதிர்பார்ப்பது போல நடப்பது இல்லை.

ஒருமையில் பேசியதாக புகார்:

அந்த வகையில், எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. இந்த வீடியோவில் வனத்துறை கட்டுப்பாட்டில் இருக்கும் பகுதியை கார் கடக்கும்போது, அங்கு வாகன போக்குவரத்தை நிர்வகிக்கும் அதிகாரி ஒருவர், சுற்றுலா பயணிகளை வா, போ, வாடா, போடா என ஒருமையில் கனத்த குரலில் சீர்படுத்தியது நடந்தது.

இதையும் படிங்க: இந்த வீடியோவை பார்த்தால் இனி பிரியாணியே சாப்பிட தோணாது! நெட்டிசன்களுக்கு கோபத்தை உண்டாக்கிய வீடியோ!

சுற்றுலாப்பயணி குற்றச்சாட்டு:

இதனை சுற்றுலா பயணி ஒருவர் வீடியோ எடுத்து தனது ஆதங்கத்துடன் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளது வைரலாகி வருகிறது. அவர் தனது பதிவில், "வருஷம் முழுவதும் கஷ்டப்பட்டு சம்பாதிச்சி, மீதம் உள்ள பணத்தை வைத்து மன அமைதிக்கு ஒரு சுற்றுல போகலாம்னு வந்தால். அரசு அதிகாரிகள் இப்படி நடத்துகிறார்கள் இதற்கு ஒரு முடிவு இல்லையா?" என தமிழக அரசை நோக்கி கேள்வி எழுப்பி இருக்கிறார். அவரை பதிவுக்கு ஆதரவும், மாற்று கருத்தும் என கருத்துக்கள் குவிந்து வருகின்றன.

சாலையில் வாகனத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபடும் அதிகாரிக்கு தெரியாமல் இந்த வீடியோ எடுத்ததாக தெரியவருகிறது. அதே நேரத்தில், வாகன ஓட்டிகள் சரியான அணுகுமுறையை பின்பற்றி வருகை தந்தால், அதனை ஒழுங்குபடுத்த வேண்டிய அவசியம் இல்லை என்றும் கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன. 

வைரல் வீடியோ:

இதையும் படிங்க: போலீஸ்காரரின் கையை கடித்து பதம் பார்த்த தவெக தொண்டர்.. வெறிகொண்டு நடந்த சம்பவம்.!