போலீஸ்காரரின் கையை கடித்து பதம் பார்த்த தவெக தொண்டர்.. வெறிகொண்டு நடந்த சம்பவம்.!



TVK Cadre Bites Policeman’s Hand During Protest in Dharmapuri 

தர்மபுரி மாவட்டம் பாலக்கோட்டில் மதுபான கடை மற்றும் மனமகிழ் மன்றத்தை அகற்ற கோரி தவெக தொண்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட போது, தவெக தொண்டர் ஒருவர் போலீஸ்காரரின் கையை ஆவேசமாக கடித்தார்.

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பாலக்கோடு பகுதியில் அரசு பள்ளிக்கு அருகில் மதுபான விடுதி மற்றும் மனமகிழ் மன்றம் செயல்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனை அகற்ற வேண்டுமென தர்மபுரி மற்றும் பாலக்கோடு பகுதிகளிலிருந்து வந்த தமிழக வெற்றிக் கழகத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் காவல்துறையினர் தடுப்புகளை அமைத்து தடுப்பு பணிகளில் ஈடுபட்டிருந்தனர்.

காவலரின் கையை கடித்த தொண்டர்:

இதனை மீறி தவெகவினர் மனமகிழ் மன்றத்தை முற்றுகையிட முயற்சி செய்த நிலையில், பலரும் கேட் மீது ஏறி குதித்து உள்ளே செல்ல முயற்சி செய்துள்ளனர். அவர்களை அதிகாரிகள் தடுத்து நிறுத்திய நிலையில், காவலர் ஒருவரின் கையை தவெக தொண்டர் ஆவேசமாக கடித்த சம்பவம் நடந்தது. இந்த வீடியோ தற்போது வெளியாகி பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது. 

தவெக போராட்டம்

சுய கட்டுப்பாடு இல்லை:

முன்னதாக தவெக தொண்டர்களுக்கு சுய கட்டுப்பாடு தேவை என பல அரசியல் கட்சித் தலைவர்கள் தங்களது அறிவுரையை கூறி வந்த நிலையில், அதற்கேற்றது போல இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. இது தொடர்பான வீடியோ வெளியாகி சர்ச்சையை சந்தித்திருக்கிறது.


 

வீடியோ நன்றி: தந்தி டிவி