தளபதி விஜய்யின் பீஸ்ட் படத்தில் இந்த முன்னணி பாலிவுட் ஸ்டாரா! வேற லெவலில் இருக்குமே.. வெளியான புதிய தகவல்!!

தமிழ் சினிமாவின் தளபதியாக வலம்வரும் விஜய் அடுத்து, கோலமாவு கோகிலா, டாக்டர் போன்ற படங்களை இ


actor sharukh khan going to join in beast movie

தமிழ் சினிமாவின் தளபதியாக வலம்வரும் விஜய் அடுத்து, கோலமாவு கோகிலா, டாக்டர் போன்ற படங்களை இயக்கிய நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகிவரும் பீஸ்ட் என்ற படத்தில் நடித்து வருகிறார் விஜய்யின் 65வது படமான இதில் பூஜா ஹெக்டே ஹீரோயினாக நடிக்கிறார். மேலும் அபர்ணா தாஸ், யோகிபாபு, விடிவி கணேஷ் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். 

மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.இந்த படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியாவில் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து கொரோனோ ஊரடங்கு காரணமாக இரண்டாம் கட்ட படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. 

beast

இந்நிலையில் பீஸ்ட் திரைப்படத்தில் பிரபல பாலிவுட் முன்னணி நட்சத்திரமான ஷாருக்கான் கெஸ்ட் ரோலில் நடிக்க உள்ளதாக புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. ஆனால் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் எதுவும் வெளிவரவில்லை. ஆனால் இந்த தகவல் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது.