அந்தமானில் கச்சேரி.. இன்ப சுற்றுலா சென்ற அய்யனார் துணை நடிகர்கள்.. வைரலாகும் வீடியோ.!
ஹீரோவாக அவதாரம் எடுத்த நகைச்சுவை ஜாம்பவான் செந்தில்.. டைட்டில் என்ன தெரியுமா?
தமிழ் சினிமாவின் முன்னணி நகைச்சுவை நடிகர் செந்தில். இவர் கவுண்டமணி உடன் நடித்த காமெடி காட்சிகள் இன்றளவும் ரசிக்கும் படியாக உள்ளது. நகைச்சுவை நடிகர் செந்தில் வயது முதுமை காரணமாக தற்போது ஒரு சில திரைப்படங்களில் மட்டுமே நடித்து வருகிறார்.

இந்த நிலையில் தற்போது முதல் முறையாக ஹீரோவாக அவதாரம் எடுத்துள்ளார். அதன்படி ராக் அண்ட் ரோல் மற்றும் ஏபி ப்ரொடக்ஷன்ஸ் சார்பில் யாஸ்மின் பேகம் மற்றும் இணைந்து தயாரிக்கும் 'வாங்கண்ணா வணக்கங்கண்ணா' என்ற திரைப்படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார்.

மேலும் இந்த படத்தில் சந்தியா சுப்பிரமணியன், அபிநயஸ்ரீ, நதியா வெங்கட், பிரபு சன்னி பாபு உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இந்த படத்தை ராஜ் கண்ணாயிரம் என்பவர் இயக்கி வருகிறார். இந்தப் படம் முழுக்க முழுக்க காவடியில் உருவாக்கப்பட்டுள்ளது.