சினிமா

சீரியலில் குதித்த காமெடி நட்சத்திரம் செந்தில்! சன்டிவியில் மீண்டும் ஒரு புதுமை!

Summary:

actor senthil in new serial


தமிழகம் மட்டும் இல்லாமல் இந்திய அளவில் பிரபலமாகி தற்போது உலகம் முழுவதும் சன் டிவி தொலைக்காட்சி பார்க்க ஆரம்பித்துவிட்டனர். சன் தொலைக்காட்சியின் இந்த பிரமாண்ட வளர்ச்சி மிக முக்கிய காரணங்களில் ஓன்று அதில் ஒளிபரப்பாகும் சீரியல்கள்தான். தமிழ் தொலைக்காட்சிகளில் தற்பொழுது வரை முதல் இடத்தில் இருப்பது சன் தொலைக்காட்சி தான். 

சன்டிவி சீரியலுக்கு தற்போது இளைஞர்கள், இளம்பெண்கள் என அணைத்து தரப்பு மக்களும் ரசிகர்கள் ஆகிவிட்டனர். அதற்கு காரணம் புத்தம்புதிய தொடர்கள் தான். அதேபோல சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் தொடர்களுக்கும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. சன் தொலைக்காட்சியில் சினிமா பிரபலங்களான ராதிகா,  ரம்யா கிருஷ்ணன்,  ரேவதி, நதியா,  பானு என பல பிரபலங்கள் நடித்ததால் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது.

இந்தநிலையில், சன்டிவியில் விரைவில் புத்தம்புதிய தொடர்  "ராசாத்தி" என்ற சீரியலை ஒளிபரப்ப உள்ளனர். அந்த தொடரில் விஜயகுமார், நகைச்சுவை நடிகர் செந்தில், பொள்ளாச்சி பாபு உள்ளிட்ட ஏராளமான பிரபலங்கள் நடித்துள்ளனர். 

கிராமத்து வாசனையுடன் மங்களகரமாக இந்த தொடரை உருவாக்குகின்றனர். இந்த சீரியலில் காமெடி நட்சத்திரம் செந்தில் நடிப்பதால் இந்த சீரியலுக்கு ஏராளமான எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கு ஏற்பட்டுள்ளது. விரைவில் ஒளிபரப்பாகவுள்ள இந்த தொடருக்கு ப்ரோமோ வெளியாகி வைரலாகி வருகிறது.


Advertisement