சமாதியில் இருந்து எழுந்த மம்மி போல வந்தேன் : திரைவாழ்க்கை குறித்து மனம்திறந்த சந்தானம்.!



actor-santhanam-speech

தமிழ் திரையுலகில் காமெடி சூப்பர் ஸ்டாராக வலம்வந்து, திரையில் நாயகனாக ஜொலித்துக்கொண்டு இருப்பவர் சந்தானம். இவரிடம் சமீபத்தில் தனியார் சேனல் ஒன்று பேட்டி எடுத்தது. அப்போது பேசிய சந்தானம், "நான் சினிமா துறையில் அதிகம் கற்றுக் கொண்டிருக்கிறேன். எனது நடிப்பில் உருவாகி இன்னும் ரிலீஸ் ஆகாமல் இருக்கும் சர்வர் சுந்தரம், மன்னவன் வந்தானடி படங்கள் விரைவில் ரிலீஸ் ஆகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

Actor Santhanam

நானும் அந்த படங்களை அதிகம் எதிர்பார்த்தேன். நான் நன்றாக உழைத்துக் கொண்டு இருந்தேன். எனது தரப்பில் இருந்து எவ்வளவு ஒத்துழைக்க முடியுமோ அவ்வளவு ஒத்துழைப்பு கொடுத்துள்ளேன். தில்லுக்கு துட்டு படத்திற்கு முன்னதாக எனக்கு சினிமா தொடர்பாக பெரிய அளவில் எதுவும் தெரியாது. அந்த படம் மக்கள் மத்தியில் மிகவும் விரும்பப்பட்டது. அந்த படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அடுத்தடுத்து மூன்று தயாரிப்பாளர்கள் என்னிடம் படம் நடிக்க ஒப்பந்தம் செய்தனர். நானும் நடித்துக் கொடுத்தேன். இரண்டு வருடங்களுக்கு கடந்தும் படம் ரிலீஸ் ஆகவில்லை. 

அவர்கள் அடுத்தடுத்து பல பிரச்சனையை கூறி படத்தை முடக்கி விட்டனர். அதற்கு பின்னர் தான் சக்கபோடு போடுராஜா படத்தில் நடித்தேன். அந்தப் படமும் எதிர்பார்த்த அளவு வெற்றியை கொடுக்கவில்லை. அடுத்தடுத்த தோல்வி என்று மன அழுத்தம் அதிகமானது. அதன் பின்னர்தான் தில்லுக்கு துட்டு இரண்டாம் பாகம் தயாரானது. சினிமாவில் இருக்கும் பல சிக்கல்களை எனது அனுபவங்கள் கற்றுக் கொடுத்துள்ளன. படத்தின் தயாரிப்பு பணிகள் ஒருபுறம் இருக்க, அதனை மக்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில் உள்ள டிஸ்ட்ரிபியூஷன் பணிகளும் பெரும் சவால் ஆனதாக இருக்கிறது. 

Actor Santhanam

பல தோல்விக்கு பின்னர் கட்டி வைத்த சமாதியில் இருந்து மீண்டும் எழுந்து வந்தது மம்மி போல நானும் எழுந்து வந்தேன். அதன் பின்னரே தயாரிப்பாளரை தேர்வு செய்யும் முறை குறித்தும் அறிந்து கொண்டேன். நாம் எவ்வளவு சம்பாதித்தாலும் வயிறுக்கு என்னவோ அதை சாப்பிடுகிறேன். சாப்பிடுவதற்கு அனைவரும் பணம் சம்பாதிக்கிறோம். நம்மை நம்பி 100 ரூபாய் கொடுத்து வரும் ரசிகர்களை திருப்தி படுத்தினால் மட்டுமே இனி சினிமாவில் நிலைக்க முடியும்" என்று தெரிவித்தார்்.