புலியின் வாலை பிடித்து நடிகர் சந்தானம் என்ன செய்துள்ளார் என்று பாருங்கள்... வைரலாகும் வீடியோ!!

புலியின் வாலை பிடித்து நடிகர் சந்தானம் என்ன செய்துள்ளார் என்று பாருங்கள்... வைரலாகும் வீடியோ!!


Actor Santhanam latest video viral

தமிழ் சினிமாவில் முதலில் சின்னத்திரையில் தோன்றி பின்பு தனது கடின உழைப்பால் வெள்ளித்திரைக்கு சென்று முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வருபவர் நடிகர் சந்தானம். இவர் இதுவரை 100 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இவர் விஜய், அஜித், விக்ரம் போன்ற முன்னணி நடிகர்களுடன் இணைந்து ஏராளமான திரைப்படங்களில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் கலக்கி வந்த சந்தானம் தற்போது கதாநாயகனாக நடித்து வருகிறார்.

இந்நிலையில் தற்போது நடிகர் சந்தானம் பிரபல கன்னட இயக்குனர் பிரசாந்த் ராஜ் இயக்கத்தில் கிக் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் தன்யா ஹோப், ராகினி திரிவேதி, கோவை சரளா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். கிக் படத்தின் பாடல் காட்சிகள் சமீபத்தில் வெளியாகி வைரலானது.

இதைத்தொடர்ந்து சந்தானம் மீண்டும் திரில்லர் திரைப்படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் நடிகர் சந்தானம் புலியுடன் விளையாடும் வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து அதில் இதன் பெயர் தான் புலி வாலை பிடிக்கிறதா என்று குறிப்பிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.