மிரட்டல் காட்சிகள்.. விஜய் தேவரகொண்டாவின் கிங்டம் பட டீசர் இதோ..!
திருவண்ணாமலை கோவிலில் சாமி தரிசனம் செய்த நடிகர் ரஜினிகாந்த்.!

ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா தனுஷ் தயாரிப்பில் உருவாகி வரும் திரைப்படம் லால் சலாம். இந்த படத்தின் படப்பிடிப்பு திருவண்ணாமலை, காஞ்சிபுரம் மாவட்டங்களில் நடைபெற்று வருகின்றன.
படத்தில் நடிகர் ரஜினிகாந்த் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். இதனைத்தவிர்த்து விஷ்ணு விஷால் உட்பட பல திரையுலக நட்சத்திரங்களும் நடித்து வருகின்றனர்.
இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த் திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் இன்று சுவாமி தரிசனம் செய்தார். இது குறித்த புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி உள்ளன.