
actor parthiban direction - oththa seruppu teaser release
தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் நடிகர் பார்த்திபன். சில படங்களை தானே இயக்கியும் நடித்துள்ளார். நடிகர் வடிவேலுவும் இருவரும் சேர்ந்து நடித்த படங்களின் காமெடிகள் இன்றளவும் ரசிகர்கள் மத்தியில் பிரபலம். அந்த அளவிற்கு காமெடியிலும் கலக்கும் நடிகர்களின் வரிசையில் இடம் பிடித்திருப்பவர். சமீப காலமாக குணச்சித்திர, வில்லன் வேடங்களில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் நடிகர் பார்த்திபன் தற்போது 'ஒத்த செருப்பு' என்ற படத்தை தானே இயக்கி நடித்து வருகிறார். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இப்படத்திற்கு ராம்ஜி ஒளிப்பதிவு செய்துள்ளார். சமீபத்தில் வெளியான இப்படத்தின் டைட்டில் லுக் போஸ்டரை மக்கள் செல்வன் விஜய் சேதுபதி வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது இப்படத்தின் டீசர் வெளியாகி உள்ளது. அதில் நடிகர் பார்த்திபன் மட்டும் அதுவும் ஒரே ஒரு அறையில் படம் முழுவதும் அந்நியன் விக்ரம் போல மாறி மாறி பேசி நடிப்பது போன்ற தெறிக்கவிடும் ட்ரைலர் வெளியாகி உள்ளது.
Advertisement
Advertisement