தமிழகம் சினிமா

வறுமையில் வாடும் தமிழ் நடிகை மாற்றுத்திறனுடைய மகனுக்கு உதவுமாறு தமிழக அரசுக்கு கோரிக்கை.!

Summary:

actor paravai muniyamma - request tamilnadu

பிரபல நாட்டுப்புற பாடகியான பரவை முனியம்மா வறுமையில் வாடுவதாகவும் மாற்றுத்திறனுடைய தன்னுடைய மகனுக்கு உதவுமாறும் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

ஏராளமான நாட்டுப்புறப் பாடல்களைப் பாடி மக்கள் மத்தியில் பிரபலமாக விளங்கியவர் பரவை முனியம்மா. மேலும் தமிழ் சினிமாவில் பல பாடல்களை பாடியும் ஏராளமான திரைப்படங்களிலும் நடித்துள்ளார். இதனால் சமீபத்தில் வெளியான திரைத்துறை கலைஞர்களுக்கு வழங்கப்படும் கலைமாமணி விருது பட்டியலிலும் இவரது பெயரும் இடம் பெற்றது.

தற்சமயம் மதுரை மாவட்டம்  பரவை என்னும் பகுதியில் வாழ்ந்து வருகிறார் பரவை முனியம்மா. இந்நிலையில் தான் வறுமையில் வாடுவதாகவும் மறைந்த முதல்வர் ஜெயலலிதா வழங்கிய ஆறு லட்சம் நிதி உதவியை தனது வாழ்வாதாரமாகக் கொண்டு வாழ்ந்து வருவதாகவும் தெறிவித்துள்ளார். தனக்குப் பிறகு அந்த நிதி உதவியை மனவளர்ச்சி குன்றிய மாற்றுத்திறனாளியான தன் மகனுக்கு தமிழக அரசு வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். 


Advertisement