சினிமா

கீர்த்தி சுரேஷ் தூங்கும் போது பின்னால் நின்று இயக்குனரும், ஹீரோவும் செய்த காரியம்.. வைரலாகும் புகைப்படம்

Summary:

கீர்த்தி சுரேஷ் தூங்கி கொண்டிருந்தபோது நடிகர் நிதின் மற்றும் இயக்குநர் வெங்கி அட்லுரி இருவரும் கீர்த்தி சுரேஷுக்கு தெரியாமல் அவருடன் செல்பி எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது வைரலாகிவருகிறது.

கீர்த்தி சுரேஷ் தூங்கி கொண்டிருந்தபோது நடிகர் நிதின் மற்றும் இயக்குநர் வெங்கி அட்லுரி இருவரும் கீர்த்தி சுரேஷுக்கு தெரியாமல் அவருடன் செல்பி எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது வைரலாகிவருகிறது.

தமிழ், தெலுங்கு, ஹிந்தி என இந்திய அளவில் பிரபலமான நடிகைகளில் ஒருவராக வலம்வருகிறார் கீர்த்தி சுரேஷ். இவர் நடித்த பென்குயின், மிஸ் இந்தியா ஆகிய படங்கள் கொரோனா காலத்தில் ஓடிடி தளங்களில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் நடிகை கீர்த்தி சுரேஷ் இயக்குனர் வெங்கி அட்லுரி இயக்கும் ரொமான்டிக் படம் தெலுங்கு படம் ஒன்றில் நடிகர் நிதினுக்கு ஜோடியாக நடித்துவருகிறார். இந்த படத்திற்கு "ரங் தே" என பெயரிடப்பட்டுள்ளது.

கொரோனா காரணத்தால் இந்த படத்தின் படப்பிடிப்பு துபாயில் நடந்துவருகிறது. இந்நிலையியல் படத்தின் படப்பிடிப்பின்போது ஒரு ஓரமாக அமர்ந்து குட்டி தூக்கம் போட்டுக்கொண்டிருந்த கீர்த்தி சுரேஷின் அருகில் சென்று, படத்தின் இயக்குனரும், ஹீரோவும் கீர்த்தி சுரேஷுக்கு தெரியாமல் அவருடன் செல்பி எடுத்துள்ளனர்.

அந்த புகைப்படத்தை அவர்கள் சமூக வலைத்தளங்களில் பதிவிட, அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகிவருகிறது.


Advertisement