சினிமா

சாப்பாடு இல்லை, நல்ல துணிகூட இல்லை..! டிரைவர் வேலை பார்க்கிறேன்..! மனைவியுடன் புகைப்படம் வெளியிட்ட நடிகர் நகுல்..!

Summary:

Actor Nakkul latest photo

இயக்குனர் சங்கர் இயக்கத்தில் வெளியான பாய்ஸ் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் நகுல். பாய்ஸ் படத்தை அடைத்து சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் வெளியான காதலில் விழுந்தேன் படம் மூலம் நாயகனாக தமிழ் சினிமாவில் பிரபலமானார் நடிகர் நகுல்.

பிரபல நடிகை தேவையணியின் தம்பியான இவர் ஒருசில வெற்றிப்படங்களுக்கு பிறகு தமிழ் சினிமாவில் இருந்து காணாமல் போனார். கடைசியாக வல்லினம், தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் போன்ற படங்களில் நடித்திருந்தார். தற்போது எரியும் கண்ணாடி என்கிற ஒரு படம் மட்டுமே கைவசம் உள்ளது.

இந்நிலையில் தனது மனைவியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள நகுல், டிரைவர் வேலை பார்க்கிறேன், சம்பளம் கிடையாது, சரியான உடை கிடையாது, சாப்பாடு கிடையாது,மிகவும் மோசமான நிலை என பதிவிட்டுள்ளார்.


Advertisement