சினிமா

நடிகர் எம்.எஸ் பாஸ்கர் மகளுக்கு திருமண நிச்சயதார்த்தம்; வைரலாகும் புகைப்படங்கள்.!

Summary:

actor m.s bhaskar daughter ishwrya marriage photos

தமிழ் சினிமாவில் சிறந்த நகைச்சுவை நடிகராக வலம் வருபவர் எம்.எஸ் பாஸ்கர். நகைச்சுவை மட்டுமல்லாது குணச்சித்திர வேடங்களிலும் அசத்தி வருகிறார். திருமதி ஒரு வெகுமதி என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான இவர் சினிமாவில் நடிப்பதற்கு முன்பே பல மேடை நாடகங்களில் நடித்து பிரபலமானவர்.

எம்.எஸ்.பாஸ்கருக்கு ஐஸ்வர்யா என்ற மகளும், ஆதித்யா என்ற மகனும் இருக்கின்றனர். ஐஸ்வர்யா பாஸ்கரும் டப்பிங் ஆர்டிஸ்டாக தமிழ் சினிமாவில் வலம் வருகிறார். இவரது மகன் ஆதித்யா ஏற்கனவே விஜய் சேதுபதி நடித்த 96 படத்தில் விஜய் சேதுபதியின் சிறு வயது கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், நடிகர் எம் எஸ் பாஸ்கரின் மகள் ஐஸ்வர்யாவுக்கும், தொழிலதிபர் சுதாகர் – சீனா தம்பதியின் மகன் அகுலுக்கும் திருமணம் நிச்சயதார்த்தம் சென்னையில் நடந்துள்ளது. இதில், நடிகர் பிரபு கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார். திருமண நிச்சயதார்த்தத்தைத் தொடர்ந்து விரைவில் திருமணம் நடக்க இருக்கிறது.


Advertisement