
அடிதூள்.. தளபதி 61 படத்தில் இணையும் சூப்பர் ஸ்டார் நடிகர்! வெளிவந்த மாஸ் அப்டேட்!
தமிழ் சினிமாவில் ஏராளமான திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித் குமார். உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டிருக்கும் அவர் இறுதியாக போனி கபூர் தயாரிப்பில் ஹெச். வினோத் இயக்கத்தில் வலிமை திரைப்படத்தில் நடித்துள்ளார்.
இப்படம் பொங்கலை முன்னிட்டு வெளியாகும் என எதிர்பார்த்திருந்த நிலையில் கொரோனா காரணமாக ரிலீஸ் தள்ளிப்போனது. மேலும் வலிமை படம் அடுத்த மாதம் வெளியாகும் என எதிர் பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் தற்போது தல அஜித்தின் 61வது பட வேலைகள் தொடங்கியுள்ளது.
இந்தப் படத்தையும் போனி கபூர் தயாரிப்பில், வினோத் இயக்க உள்ளார். இந்த படத்தில் நடிக்கும் நடிகர் நடிகைகள் தேர்வு நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் தல 60 ஆவது படத்தில் பிரபல மலையாள நடிகர் மோகன்லால் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
Advertisement
Advertisement