தமிழகம் சினிமா

புதிய படத்திற்காக வித்தியாசமாக தோன்றும் மாதவன்; மாதவனா இது அடையாளமே தெரியலையே.!

Summary:

actor mathavan - new flim - new gettup

இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் அலைபாயுதே திரைப்படத்தில் அறிமுகமானவர் நடிகர் மாதவன். அதை தொடர்ந்து மின்னலே திரைப்படம் மூலம் அனைத்து பெண்கள் மனதிலும் இடம் பிடித்தார். சாக்லேட் பாயாக இருந்த மாதவன் இறுதிச்சுற்று படத்தில் தனது தோற்றத்தை மாற்றி வித்தியாசமான பாத்திரத்தில் நடித்தார்.

இந்நிலையில் இஸ்ரோ விஞ்ஞானி பற்றிய ராக்கெட்ரி - தி நம்பி எஃபெக்ட் என்ற படத்தில் நடிக்கிறார். இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்க்கை வரலாற்றை மையமாக கொண்டு இத்திரைபடம் உருவாக்கபட உள்ளது. இதற்காக நம்பி நாராயணன் போலவே தனது தோற்றத்தை மாற்றி நடித்துள்ளார். 

தலைமுடி, தாடி என  நம்பி நாராயணன் போலவே மாறிய அவர் தொப்பையையும் வளர்த்திருக்கிறார். அதிசயமாக அடுத்த 12 நாட்களில் எந்த டயட் முறையையும் பின்பற்றாமல் பழைய தோற்றத்துக்கு மாறியுள்ளார். "நம்புங்கள். உங்களால் முடியும்" என்றும் தனது டுவிட்டர் பதிவில் மாதவன் குறிப்பிட்டுள்ளார். 


Advertisement