அஜித் பெயரை சொல்லி ஏமாற்றினாரா நடிகர் மயில்சாமி? அவரே கூறிய உண்மை தகவல்!

அஜித் பெயரை சொல்லி ஏமாற்றினாரா நடிகர் மயில்சாமி? அவரே கூறிய உண்மை தகவல்!


actor-maiel-samy-talks-about-ajith

ஆர்.ஜே பாலாஜி, நாஞ்சில் சம்பத் ஆகியோர் நடித்துள்ள படம் LKG. ஆர்.ஜே பாலாஜி இந்த படத்திற்கு கதை, திரைக்கதை அமைத்துள்ளார். படத்தின் ட்ரைலர் சில நாட்களுக்கு முன்பு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் வரும் பிப்ரவரி 21 ஆம் தேதி படம் வெளியாக உள்ளது.

இந்நிலையில் இந்தப் படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் கலந்துகொண்டு நடிகர் மயில்சாமி பேசினார். அவர் பேசுகையில் நடிகர் சித்தார்த், பாலாஜி இருவரும் இணைந்து சென்னை பெருவெள்ளத்தின் போது பணியாற்றியதற்காக பாராட்டினார்.

Ajith

மேலும், தனது வாழ்க்கையிலும் நடந்த ஒரு அனுபவம் குறித்து பேசினார் மயில் சாமி. அதில், 2015-ம் ஆண்டு வெள்ள நீரால் சூழ்ந்து பாதிப்புக்குள்ளான போது சாலிகிராமம், தசரதபுரம், விருகம்பாக்கம் பகுதிகளில் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டேன். அப்போது எனக்கு துணையாக ஒருசில இளைஞர்களை ஓன்று சேர்த்தேன். முதலில் தங்கியவர்கள், அஜித்துடன் புகைப்படம் எடுத்து தருகிறேன் என்று சொன்னதும் 20 பேரும் எந்தவிதமான எதிர்பார்ப்புமின்றி 13 நாட்கள் என்னுடன் நிவாரண பணிகளில் ஈடுபட்டனர்.

அதன்பின்னர் நான் அஜித் சாரை சந்திக்கவில்லை. அவரை சந்தித்தால் நிச்சயம் நான் சொன்ன மாதிரி புகைப்படம் எடுத்து தருவேன் என்று கூறியுள்ளார்.