அனாதை போல இறந்து கிடந்த பிரபல காமெடி நடிகர்..! கண்ணீர் வரவழைத்த அவரது கடைசி நாட்கள்..! சோகமான கதை..!

அனாதை போல இறந்து கிடந்த பிரபல காமெடி நடிகர்..! கண்ணீர் வரவழைத்த அவரது கடைசி நாட்கள்..! சோகமான கதை..!


actor-kullamani-dead-news

ஓரிரு படங்களில் நடித்தால் கூட கோடிகளில் சம்பளம் வாங்கும் நடிகர்கள் இருக்கும் இதே சினிமாவில்தான் பல நூறு படங்களுக்கு மேல் நடித்திருந்தாலும் சாதாரண வாழ்க்கைக்கு கூட கஷ்டப்படும் நடிகர்கள், நடிகைகள் இருக்கத்தான் செய்கிறார்கள்.

அவர்களில் ஒருவர்தான் துணை நடிகர் குள்ளமணி. கரகாட்டக்காரன் படத்தில் நான் வியாபாரிங்க என்று வருவாரே அவர் தான். எம்.ஜி.ஆர் காலத்தில் இருந்தே நடித்து வந்த இவர் 500 படங்கள் வரை நடித்துள்ளார்.

ரஜினி, கமல் என தமிழ் சினிமாவின் ஜாம்பவான்களின் படங்களில் நடித்துள்ள இவர் சுமார் 500 படங்களுக்கு மேல் நடித்திருந்தும் சாதாரண வாழ்க்கைகூட வாழமுடியாமல் மிகவும் தவித்துள்ளார். கிட்னி பாதிக்கப்பட்டு கடந்த 2013 ஆண்டு டிசம்பர் 25 ஆம் தேதி மரணமடைந்தார் நடிகர் குள்ளமணி.

அரசு மருத்துவமனையில் அனாதை போல இறந்து கிடந்தாராம். இவரது மறைவுக்கு சினிமா நட்சத்திரங்கள் சிலர் கூட எட்டிப்பார்க்கவில்லை என்பதும் மேலும் சோகமான விஷயம்.