சினிமா

முதல் டோஸ் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார் நடிகர் கார்த்தி! தீயாய் பரவும் புகைப்படம்!!

Summary:

தமிழகம் முழுவதும் தற்போது கொரோனா இரண்டாவது அலையாக பரவி பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தியது. இ

தமிழகம் முழுவதும் தற்போது கொரோனா இரண்டாவது அலையாக பரவி பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தியது. இந்நிலையில் கொரோனா பரவலை கட்டுபடுத்த மத்திய மாநில அரசுகள் கடுமையான பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மேலும் தமிழகம் முழுவதும் தற்போது சில தளர்வுகளுடன் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. 
அதனை தொடர்ந்து தற்போது கொரோனா படிப்படியாக குறையத் தொடங்கியுள்ளது

மேலும் கொரோனா தொற்றிலிருந்து பாதுகாத்துக்கொள்ள ஜனவரி மாதம் முதல் அனைவருக்கும் தடுப்பூசியும் போடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தடுப்பூசி போட்டுக் கொண்ட பிரபலங்கள் பலரும் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அந்தப் புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு வருகின்றனர். அதனை தொடர்ந்து ஆரம்பத்தில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள தயங்கிய பலரும் தற்போது தடுப்பூசி போட்டுக்கொள்ள முன்வருகின்றனர்.

இந்நிலையில், நடிகர் கார்த்தி தற்போது கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளார். அப்போது எடுத்த புகைப்படத்தை தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்த அவர், முதல் டோஸ் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டேன் என குறிப்பிட்டுள்ளார். நடிகர் கார்த்தியின் இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


Advertisement