பிரபல சண்டை கலைஞர், நடிகர் ஜாலி பாஸ்டியன் காலமானார்; மாரடைப்பால் பிரிந்த உயிர்.!

பிரபல சண்டை கலைஞர், நடிகர் ஜாலி பாஸ்டியன் காலமானார்; மாரடைப்பால் பிரிந்த உயிர்.!



Actor Jolly Bastian Died Heart Attack 

 

கன்னட திரையுலகில் பிரபல ஸ்டன்ட் மாஸ்டராகவும், நடிகராகவும், இயக்குனராகவும் பணியாற்றி வந்தவர் ஜாலி பாஸ்டியன் (வயது 57). இவர் திரையுலகில் அறிமுகமான நாளிலிருந்து தற்போது வரை 900-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.

அதேபோல லாக் டவுன் டைரி என்ற படத்தை இயக்கி, திரையுலகில் இயக்குனராகவும் அறிமுகம் ஆகியிருந்தார். இந்நிலையில் தனது வீட்டில் இருந்த ஜாலி பாஸ்டியனுக்கு (Jolly Bastian) திடீர் மாரடைப்பு ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார்.

அவரின் மறைவு திரையுலகினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ள நிலையில், திரைத்துறையினர் பலரும் நேரில் சென்று உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இவரது மரணம் ரசிகர்கள் பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.