தமிழகம் சினிமா

நயன்தாராவுடன் மீண்டும் பல படங்களில் நடிக்க வேண்டும்-பிரபல தமிழ் நடிகர்; யார் தெரியுமா?

Summary:

actor jai - nayanthara - intresed in new movie

நயன்தாராவுடன் மீண்டும் இணைந்து பல படங்களில் நடிக்க வேண்டும் என்று நடிகர் ஜெய் விருப்பம் தெரிவித்துள்ளார்.

இளைய தளபதி விஜய் நடிப்பில் வெளிவந்த பகவதி என்ற திரைப்படத்தில் அவருக்கு தம்பியாக நடித்து தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகர் ஜெய். அதன் பிறகு சசிகுமாரும் இவரும் இணைந்து நடித்து வெளியான  சுப்ரமணியபுரம் படத்தில் இவருடைய நடிப்பு பலரால் வெகுவாகப் பாராட்டப்பட்டது.

அதையடுத்து ‘சென்னை 28’ என்ற படத்தில் நடித்தார். பின்னர் சரோஜா, எங்கேயும் எப்போதும், ஜருகண்டி, ராஜாராணி உள்பட பல படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளார். இதனால் மிகவும் பிரபலமான இவர் தற்சமயம் தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக வளர்ந்து வருகிறார். 

இந்நிலையில் தன்னுடைய சினிமா வாழ்க்கைப் பற்றி ஜெய் கூறுகையில்,  தற்போது நான் ‘பார்ட்டி’, ‘நீயா-2’ ஆகிய படங்களில் நடித்துள்ளேன். இந்தப் படங்கள் விரைவில் திரைக்கு வருகின்றன. மேலும் ‘மதுரராஜா’ என்ற படத்தின் மூலம் மலையாளத்தில் அறிமுகமாகிறேன். இந்தப் படத்தில் மம்முட்டிக்கு தம்பியாக நடிக்கிறேன். எனக்கு ஜோடியாக மகிமா நம்பியார் நடிக்கிறார். 

மேலும் நயன்தாராதான் எனக்கு தமிழில் பிடித்த நடிகை 2013-ல் நாங்கள் இருவரும் இணைந்து நடித்த படம் ‘ராஜா ராணி’. இந்தப் படத்தின் படப்பிடிப்பின்போது எங்கள் இருவருக்கும் நெருக்கமான நட்பு ஏற்பட்டது. அது இப்போதும் தொடர்கிறது. தொடர்ந்து அவருடன் பல படங்களில் ஜோடியாக நடிக்க வேண்டும் என்று விரும்புகிறேன். விரைவில் என்னுடைய திருமணம் நடக்கும். முக்கியமாக அது காதல் திருமணமாகத்தான் இருக்கும்’’ என்றார் ஜெய். 


Advertisement