பிக்பாஸ் வீட்டிற்குள் மாஸாக என்ட்ரி கொடுத்த சீரியல் நடிகர் தினேஷ்.! ஒரு நாளைக்கு மட்டும் இவ்வளவு சம்பளமா??actor-dineshsalary-for-participate-in-bigboss

தமிழில் பிரபல தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பான ஏராளமான சீரியல்களில் நடித்து மக்கள் மத்தியில் நன்கு பிரபலமாக இருந்தவர் நடிகர் தினேஷ். அவர் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கிழக்கு வாசல் மற்றும் ஈரமான ரோஜாவே 2 ஆகிய தொடர்களில் நடித்து வந்துள்ளார்.

நடிகர் தினேஷ் விஜய் டிவியில் பிரிவோம் சந்திப்போம் என்ற தொடரில் தன்னுடன் நடித்த நடிகை ரச்சிதாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இருவரும் அழகிய ஜோடியாக வலம் வந்தனர். ஆனால் கருத்து வேறுபாடு காரணமாக அவர்கள் பிரிந்து தற்போது தனித்தனியாக வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் நடிகர் தினேஷ் தற்போது பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் வைல்டு கார்டு எண்ட்ரியாக நுழைந்துள்ளார்.

பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்த முதல் நாளே அவர் கேப்டனாக இருக்கும் பூர்ணிமாவிடம் சில கருத்துக்களை கூறி அதனால் வாக்குவாதங்கள் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக அவர் வாங்கிய சம்பளம் குறித்த தகவல்கள் பரவி வருகிறது. அதாவது அவருக்கு ஒரு எபிசோடுக்கு 18 முதல் 20 ஆயிரம் வரை சம்பளமாக பேசப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.