நான் உங்களுக்கு என்னய்யா துரோகம் பண்ணினேன்.. கதறி அழுது கூல் சுரேஷ் வெளியிட்ட வீடியோ!! என்ன கூறியுள்ளார் பார்த்தீங்களா!!

நான் உங்களுக்கு என்னய்யா துரோகம் பண்ணினேன்.. கதறி அழுது கூல் சுரேஷ் வெளியிட்ட வீடியோ!! என்ன கூறியுள்ளார் பார்த்தீங்களா!!



actor-cool-suresh-crying-speech-video-viral

தமிழ் சினிமாவில் பல திரைப்படங்களில் துணை கதாபாத்திரங்களில், காமெடி கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் கூல் சுரேஷ். இவர் நடிகர் சிம்புவின் தீவிர ரசிகர். அவரது ஒவ்வொரு படம் வெளியாகும்போதும் அதற்கு ரெவியூ கொடுத்து கூல் சுரேஷ் பேசும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகும். இந்நிலையில் சிம்புவின் 'வெந்து தணிந்தது காடு' படத்தின் பணி துவங்கியதிலிருந்து கூல் சுரேஷ் செல்லும் இடமெல்லாம் 'வெந்து தணிந்தது காடு சிம்புவுக்கு வணக்கத்த போடு' என தொடர்ந்து ப்ரமோட் செய்துகொண்டே இருந்தார்.

இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு வெளிவந்த வெந்து தணிந்தது காடு திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் படம் பார்க்கச் சென்ற கூல் சுரேஷின் காரை ரசிகர்கள் அடித்து நொறுக்கியதாக சமீபத்தில் தகவல்கள் வெளியானது. ஆனால் இதனை மறுத்து கூல் சுரேஷ் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் அவர், ரசிகர்கள் என்னை எதற்காக தாக்க வேண்டும், எனது பாதுகாப்பே அவர்கள்தான். நான் உங்களுக்கு என்ன துரோகம் செய்தேன். கமெண்ட்களில் என்னைப் பற்றி மிகவும் அவதூறாக பேசுகிறீர்கள். உங்களை சந்தோஷப்படுத்ததானே நான் எல்லாம் செய்கிறேன். என்னதான் நான் சமூக வலைதளங்களில் பிரபலமானாலும் வருமானமின்றி வாடகை கொடுக்க முடியாமல், வண்டிக்கு டியூ கட்ட முடியாமல் மிகவும் கஷப்படுகிறேன். உங்களுக்கு நான் ரிவியூ கொடுப்பது பிடிக்கவில்லை என்றால் இனிமேல் வரமாட்டேன். அதனால் எனக்கு எந்த வருமானமும் வர போவதில்லை.

சிம்பு ரசிகர்கள் காரை அடித்து நொறுக்கவில்லை, அவர்கள் எனக்கு கை கொடுக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் கார் மீது ஏறிவிட்டார்கள். அதற்காக நஷ்ட ஈடு கொடுக்க வேண்டும் என சிலர் கூறினர். அதெல்லாம் வேண்டாம். அதற்காக நான் வருத்தப்படவே இல்லை.  நான் கஷ்டப்பட்டால் என்னை பார்த்துக் கொள்ள என் நண்பன் சந்தானம் இருக்கிறான். எனக்கு தெரிந்த பத்து இயக்குனர்கள் உள்ளனர். சிம்பு என்னை சந்தித்து பேசியபோது, நான் வந்தால் கூட இவ்வளவு வரவேற்பு கிடைக்குமான்னு தெரியலை. உனக்கு ரசிகர்கள் நல்ல வரவேற்பு கொடுக்கின்றனர். அதை தக்க வைத்துகொள் என கூறினார் என்று கண்ணீருடன் கூறியுள்ளார்.