ஆண்களை பாவாடை போட அழைக்கும் பிரபல நடிகர்..! காரணம் தெரியுமா?..! பதறிப்போன ரசிகர்கள்..!!

ஆண்களை பாவாடை போட அழைக்கும் பிரபல நடிகர்..! காரணம் தெரியுமா?..! பதறிப்போன ரசிகர்கள்..!!


actor-brat-pitt-wearing-skert

ஹாலிவுட் திரைப்பட நடிகர் குட்டை பாவாடையில் படவிழாவில் கலந்துகொண்ட சம்பவம் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. 

இயக்குனர் டேவிட் லீட்ச் இயக்கத்தில் உருவான "புல்லட் ட்ரெயின்" திரைப்படம் இந்த ஆண்டு மக்களால் அதிகளவில் எதிர்பார்க்கப்பட்ட ஹாலிவுட் படங்களில் ஒன்றாகும். இப்படத்தில் பிராட் பிட், ஜோய் கிங், ஆரோன் டெய்லர், ஜான்சன் உட்பட பலரும் நடித்துள்ளனர். இந்த படத்தின் அசத்தலான டிரெய்லர்கள் ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பு பெற்றது. 

bullet train movie hero

இப்படம் உலகளவில் ஆகஸ்ட் 5ஆம் தேதியான நேற்று வெளியானது. இந்த நிலையில் படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சிக்காக லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் சிவப்பு கம்பள வரவேற்பு நடைபெற்ற நிலையில், அந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிராட் பிட் பழுப்பு நிறத்தினால் ஆன முட்டி தெரியும் குட்டை பாவாடையை அணிந்து வந்திருந்தார். 

இதற்கு தகுந்தவாறு கால்சட்டையும், மேல் சட்டையும் அணிந்து வந்திருந்தார். இதனை கண்ட பலரும் ஆச்சரியத்தில் உறைந்து போக, "லண்டன் நகரில் வெப்பம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் இந்த உடை காற்றோட்டமாக உள்ளது. ஆண்கள் அனைவரும் இதனை பயன்படுத்தி பாருங்கள். நாம் அனைவரும் ஒருநாள் இறக்கப்போவது உறுதி. 

bullet train movie hero

எதையாவது வித்தியாசமாக செய்யலாம்" என்று கூறியிருக்கிறார். இது தொடர்பான புகைப்படம் இணையத்தில் வைரலாகியுள்ளது. இதனைக்கண்ட நெட்டிசன்கள் இவர் என்ன தான் மட்டும் பாவாடை போட்டது போதாதென்று, போவோர் வருவோரையெல்லாம் பாவாடை போடலாம் வாங்க என அழைக்கிறார்? என்று கலாய்த்து வருகின்றனர்.