தம்பி மயில்வாகனம் அப்புகுட்டியின் வாழ்க்கையில் இப்படியொரு சோகமா? கண்ணீர்விட்ட ரசிகர்கள்!!

தம்பி மயில்வாகனம் அப்புகுட்டியின் வாழ்க்கையில் இப்படியொரு சோகமா? கண்ணீர்விட்ட ரசிகர்கள்!!



actor-appukutty-talk-about-her-poverity-in-stage

தமிழ் சினிமாவில் அழகர்சாமியின்  குதிரை என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகர் அப்புகுட்டி. அதனை தொடர்ந்து சில படங்களில் நடித்த அவர் மீண்டும் நடிகர் அஜித்துடன் இணைந்து வீரம் படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் பெருமளவில் புகழப்பட்டார்.

இந்நிலையில் அப்புக்குட்டி தற்போது வாழ்க விவசாயி என்ற படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். கதிர் பிலிம்ஸ் சார்பில் அறிமுக இயக்குனர் பி.எல் பொன்னிமோகன் இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தில் நடிகை வசுந்தரா, ஹலோ கந்தசாமி ஆகியோர் நடித்துள்ளனர்.

appukutty

இந்நிலையில்  சமீபத்தில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட நடிகர் அப்புக்குட்டி பேசுகையில்,நான் சினிமாவுக்கு வந்து பத்து வருடங்கள் ஆகிவிட்டது. வாழ்க விவசாயம் கதையை இயக்குனர் என்னிடம் சொன்னபோது எனது அம்மாவையே நேரில் பார்த்தது போல இருந்தது.

எங்களிடம் சொந்தமாக விவசாயநிலம் கிடையாது. எனது பெற்றோர்கள் விவசாய தினகூலி தொழிலாளர்கள்தான். எங்களுக்கு நிலம் இருந்திருந்தால் விவசாயம் செய்திருப்பேன், ஆடு, மாடு மேய்த்திருப்பேன். ஆனால் நிலம் இல்லை என்பதால் தான் வேலை தேடி சென்னைக்கு வந்தேன்.

appukutty

விவசாயிகள் படும் கஷ்டத்தை இயக்குனர் கூறும்போது இதனை விடகூடாது என உடனே நான் நடிக்க ஒப்புக்கொண்டேன். ஆனால் எனக்கு ஜோடியாக நடிக்க நடிகைகள் தயங்குகிறார்கள். ஏன் தயங்கவேண்டும் நான் நடிகன் இல்லையா ? என்னை நடிகராக ஏற்றுக் கொள்ளக் கூடாதா? என வருத்ததுடன் பேசியுள்ளார்.  மேலும் தனக்கு ஜோடியாக நடித்த  நடிகை வசுந்தராவிற்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.