சினிமா

ஊரே அடங்கி இருக்கும் நேரத்தில் ஜல்லிக்கட்டு காளையுடன் வீரநடை போடும் நடிகர் சூரி! வைரலாகும் புகைப்படங்கள்

Summary:

Actor aoori with kaalai at lockdown

தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக இருந்து வருபவர் நடிகர் சூரி. இவருக்கு பரோட்டா சூரி என்ற அடைமொழி பெயரும் உள்ளது.

கொரோனாவால் படப்பிடிப்புகள் எதுவும் இல்லாததால் நடிகர் சூரி தற்போது மதுரை மாவட்டத்தில் உள்ள தனது சொந்த ஊரில் இருந்து வருகிறார். ஊரடங்கின் துவக்கத்தில் பல்வேறு விழிப்புணர்வு வீடியோக்களை வெளியிட்டு வந்தார்.

ஜல்லிக்கட்டிற்கு புகழ்பெற்ற மதுரை மாவட்டத்தை சேர்ந்த சூரி தனது வீட்டிலும் கருப்பன் என்ற ஜல்லிக்கட்டு காளையினை வளர்த்து வருகிறார். தற்போது வீட்டில் இருக்கும் அவர் அந்த காளையுடன் நேரத்தை செலவழித்து வருகிறார்.

இந்நிலையில் தனது கருப்பன் காளையுடன் வீதியில் நடந்து சென்று குளத்தில் குளிக்க வைக்கும் புகைப்படங்களை சூரி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் "ஊரடங்குக்கு நடுவுல ஊரே அடங்கி நிக்கும் - எங்க "கருப்பன்" நடந்து போனா!!" என கூறியுள்ளார்.


Advertisement