பிரபல நடிகர் காலமானார்! சோகத்தில் இரங்கல் தெரிவிக்கும் திரையுலகினர்!!

பிரபல நடிகர் காலமானார்! சோகத்தில் இரங்கல் தெரிவிக்கும் திரையுலகினர்!!



actor-anupam-shyam-dead

பிரபல பழம்பெரும் இந்திய நடிகரான அனுபம் ஷியாம் 63 வயது நிறைந்த நிலையில் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட நிலையில் காலமாகியுள்ளார்.

ஏராளமான பாலிவுட் திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து மக்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானவர் நடிகர் அனுபம் ஷியாம். மேலும் இவர் 2009ஆம் ஆண்டு வெளிவந்து பிரபலமான 'மன் கீ ஆவாஸ்: ப்ரதிக்யா’ என்ற தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

Anupam shyam

இந்நிலையில் உடல்நலக் குறைவு ஏற்பட்டு அவர் கடந்த வாரம் மும்பை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்துள்ளார். ஆனால் சிகிச்சை பலனின்றி நடிகர் அனுபம் ஷியாம் நேற்று காலமானார். அவரது இறுதிச் சடங்குகள் இன்று நடைபெற்றுள்ளது. 

இந்நிலையில் நடிகர் அனுபம் ஷியாம் மறைவிற்கு திரையுலகப் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.