ப்பா.. பாவடை சட்டையில் 15 வயது பெண்ணாக மாறிய நடிகை அஞ்சலி..! வைரல் வீடியோ இதோ..

நடிகை அஞ்சலியின் மாஸ் வீடியோ ஒன்று ரசிகர்களிடயே பெரிய வரவேற்பை பெற்று வருகிறது.
தமிழ் சினிமாவில் கற்றது தமிழ் என்ற படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் நடிகை அஞ்சலி. பின்னர் வெளியான அங்காடித்தெரு படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் புகழின் உச்சிக்கே சென்றார். இப்படம் அவருக்கு நல்ல பெயரை வாங்கிதந்து வாழ்க்கையின் திருப்புமுனையாக அமைந்தது.
அதனைத் தொடர்ந்து அவர் பல படங்களில் பல்வேறு கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களின் மாபெரும் வரவேற்பை பெற்று வருகிறார்.
மேலும் சினிமா என பிஸியாக இருந்தாலும், மறுபக்கம் சமூக வலைத்தளகளில் தனது ரசிகர்களை மகிழ்ச்சி படுத்தும் வகையில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியிடுவது வழக்கம். அந்தவகையில் 15 வயது பெண் போன்று மாறி பாவாடை சட்டை அணிந்த வீடியோ ஒன்று இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.