சினிமா

நடிகர் ஆனந்தராஜின் தம்பி எடுத்த விபரீத முடிவு! சோகத்தில் துடிதுடித்துபோன குடும்பத்தினர்!

Summary:

actor anandraj brother commit suicide

தமிழ் சினிமாவில் ஒரு காலகட்டத்தில் பிரபல வில்லன் நடிகராகவும்,  துணை கதாபாத்திரத்திலும் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானவர் நடிகர் ஆனந்தராஜ். இவர் ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார்.

மேலும் சமீபத்தில் வெளிவந்த பல படங்களில் இவர் காமெடி கதாபாத்திரங்களில் நடித்து கலக்கி வருகிறார். கடந்த 12 ஆண்டுகளாக அதிமுகவின் நட்சத்திர பேச்சாளராக இருந்து வருகிறார். மேலும் தேர்தல் சமயங்களில் அதிமுகவிற்கு ஆதரவாக பிரச்சாரங்களிலும் ஈடுபட்டு வந்துள்ளார். நடிகர் ஆனந்தராஜுக்கு 5 தம்பிகள், 2 தங்கைகள் உண்டு. இவர்களில் கடைசி தம்பி கனகசபை. இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. தனி வீட்டில் வசித்து வந்தார். இவர், வட்டிக்கு பணம் கொடுப்பது மற்றும் ஏலச்சீட்டு நடத்தி வந்துள்ளார்.

புதுவையில் நடிகர் ஆனந்தராஜ் தம்பி ‘திடீர்’ தற்கொலை

இந்நிலையில் படுக்கையறைக்கு  படுக்க சென்ற அவர் நீண்ட நேரமாகியும் கதவு திறக்கவில்லை. இந்நிலையில் சந்தேகமடைந்த குடும்பத்தினர் கதவை திறந்துபார்த்தபோது  அவர் அறையில் விஷம் அருந்தி தற்கொலை செய்துகொண்டுள்ளார். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் கனகசபையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

 இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டதில் கனகசபை ஏலச்சீட்டு நடத்தி வந்ததும் அதில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாகவே  கடன் பிரச்சனை ஏற்பட்டு,  மனமுடைந்து தற்கொலை செய்துகொண்டதும் தெரியவந்தது. இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
 


Advertisement