புஷ்பா 2 எப்படி? புளூ சட்டை மாறன் விமர்சனம் இதோ.. பாராட்டு., பன்ச்.. என்டில் ட்விஸ்ட்.!
"இப்ப நான் முன்ன மாதிரி குடிகாரன் இல்ல.. திருந்திட்டேன்" மேடையில் நடிகர் விமல்.!
கிராமத்து கதையம்சம் கொண்ட படங்களில் மட்டுமே நடித்து தமிழ் ரசிகர்களை கவர்ந்தவர் நடிகர் விமல். அதில் பெரும்பாலான படங்கள் தோல்வியைத் தழுவியதால், அவரது கைவசம் படங்கள் இல்லாமல் படவாய்ப்புக்காக காத்துக்கொண்டு இருந்தார்.
இந்நிலையில், 'விலங்கு' என்ற வெப் சீரிஸ் ஜீ 5 தளத்தில் வெளியாகி கவனம் பெற்றது. தற்போது இவர், "துடிக்கும் கரங்கள்" என்ற திரைப்படத்தில் நடித்துவருகிறார். இப்படத்தில் நடிகர் சதீஷ் முக்கிய வேடத்தில் நடிப்பதாகவும், வேலுதாஸ் என்ற அறிமுக இயக்குனர் இயங்குவதாகவும் தகவல்கள் வெளியானது.
இந்நிலையில், சென்னையில் நடந்த படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய விமல், " நான் எந்த பட வாய்ப்பும் இல்லாமல் இருந்த போது வந்த வாய்ப்பு தான் இந்த "துடிக்கும் கரங்கள்" படவாய்ப்பு. இதில், நடிகர் சதீஷ் மற்றும் ரோபோ ஷங்கர் என்னுடன் நடித்துள்ளனர்.
ரோபோ ஷங்கர் உடல்நிலை சரியில்லாமல் இருப்பது மிகவும் கவலையாக உள்ளது. அவரது இந்த நிலையைப் பார்த்து பலர் குடிப்பதை நிறுத்தியுள்ளனர். இப்போது நானும் இவரைப் பார்த்து குடிப்பதை விட்டு, திருந்திவிட்டேன்" என்று மேடையில் கூறினார்.