சினிமா

பிரபல கிரிமினல் வழக்கறிஞரும், நடிகருமான துரைப்பாண்டியன் காலமானார்.!

Summary:

Acter-Duraipandian-Die

பிரபல கிரிமினல் வழக்கறிஞரும், பிரபல நடிகருமான துரைப்பாண்டியன் காலமானார். 

நடிகர் விக்ரம் நடிப்பில் வெளியான ஜெமினி, ரன், மௌனம் பேசியதே போன்ற குணசித்திர வேடங்களில் நடித்து பிரபலமானவர் நடிகர் துரைப்பாண்டியன். இவர் நடிகராக மட்டுமின்றி குற்றவியல் தன்மையுடைய வழக்குகளில் ஆஜராகும் பிரபல கிரிமினல் வழக்கறிஞர் ஆவார். மேலும் அதிமுக வழக்கறிஞர் பிரிவிலும் இருக்கிறார்.

நுரையீரல் பிரச்சனை மற்றும் நீரிழவு நோயால் பாதிக்கப்பட்டிருந்த துரைப்பாண்டியன் நெஞ்சுவலி காரணமாக கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில் சிகிச்சை பலனின்றி துரைப்பாண்டியன் காலமானார். மேலும் அவருக்கு கொரோனா தொற்று மற்றும் எந்த ஒரு பிரச்சனையும் இல்லை என கீழ்ப்பாக்கம் மருத்துவமனை தகவல் தெரிவித்துள்ளது.


Advertisement