சினிமா

உடல்நிலை மோசமான நிலையில் பரவை முனியம்மா.! நேரில் சந்தித்து உதவிய பிரபல நடிகர்!!

Summary:

abisaravanan help to paravai muniyamma

தமிழ் சினிமாவில் தூள் என்ற திரைப்படத்தின் மூலம் பாடகியாகவும், நடிகையாகவும் அறிமுகமானார் பரவை முனியம்மா.  இவர் மதுரை மாவட்டத்திலுள்ள பரவை எனும் ஊரைச் சேர்ந்தவர் என்பதால் பரவை முனியம்மா என்று அழைக்கப் பெற்றார். பரவை முனியம்மா  காதல் சடுகுடு, பூ, தேவதையைக் கண்டேன், ஜெய்சூர்யா, ராஜாதி ராஜா, வீரம், மான் கராத்தே என 25 திரைப்படங்களுக்கு மேல் குணச்சித்திர மற்றும் நகைச்சுவை நடிகையாக நடித்துள்ளார்.

மேலும் அவர் கலைஞர் தொலைக்காட்சியில் கிராமத்துச் சமையல்  என்ற நிகழ்ச்சியையும்  தொகுத்து வழங்குகிறார். அதுமட்டுமின்றி பரவை முனியம்மா உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிகழ்ச்சிகளிலும் கலந்து வந்தார். 

  பரவை முனியம்மாவை சந்தித்து உதவி செய்த அபி சரவணன்

அதனை தொடர்ந்து வறுமையில் வாடிய பரவை முனியம்மாவிற்கு மறைந்த முதல்வர் ஜெயலலிதா, 6 லட்சம் ரூபாய் இருப்புநிதியும் அதன் மூலம் குடும்ப செலவுக்கு மாதந்தோறும் 6 ஆயிரம் ரூபாயும் கிடைக்குமாறு உதவினார். மேலும் மாதாந்திர மருத்துவச் செலவினை டாக்டர் எம்.ஜி.ஆர். அறக்கட்டளையில் இருந்து வழங்கவும் ஆணையிட்டிருந்தார்.

இந்நிலையில் கடந்த சில வாரங்களாக அவரது உடல்நிலை மோசமாகி இருக்கும் நிலையில், பட்டதாரி படத்தில் நடித்திருந்த நடிகர் அபி சரவணன் அவரது வீட்டிற்கே சென்று நலம் விசாரித்துள்ளார்.மேலும் அவருக்கு பணஉதவியும் செய்து மருத்துவ செலவையும் ஏற்றுக்கொள்வதாகவும் கூறியுள்ளார்.


Advertisement