
abirami mother about her daughter love with kavin
பிரபல தனியார் தமிழ் தொலைக்காட்சியான விஜய் டிவியில் கடந்த இரண்டு வருடங்களாக நடத்தப்பட்ட பிக்பாஸ் போட்டியின் மூன்றாவது சீசன் சமீபத்தில் துவங்கி மிகவும் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இந்த சீசனையும் நடிகர் கமலே மூன்றாவது முறையாக தொகுத்து வருகிறார்.
மேலும் பிக் பாஸ் நிகழ்ச்சி என்றால் சர்ச்சைகளுக்கும், காதல் காட்சிகளும் பஞ்சம் இருக்காது என்பது அனைவரும் அறிந்த ஒன்று. அவ்வாறு போட்டியாளர் அபிராமிக்கு சரவணன் மீனாட்சி புகழ் கவின் மீது காதல் ஏற்பட்டுள்ளது. மேலும் போட்டி துவங்கிய இரண்டாவது நாளிலேயே அபிராமி கவின் மீது தனக்கு ஏற்பட்டுள்ள க்ரஷ் மற்றும் காதலை குறித்து ஷெரின் மற்றும் ஸாக்ஷியுடன் பகிர்ந்து கொண்டார்.
அதனை தொடந்து அவரே கவினிடம் தனது காதலை நேரடியாக தெரிவித்துள்ளார். இந்நிலையில் கவின் அபிராமியிடம் என்னிடம் இன்னும் 15 நாள் பழகினால் என்னை உனக்கு பிடிக்காமலும் போகலாம். நான் ஆசை வார்த்தை கூறி உன்னை நோகடிக்க விரும்பவில்லை என்று கூறியுள்ளார்.
அதற்கு அபிராமி சரி நாம் நண்பர்களாக இருக்கலாம் என்று கூறியுள்ளார். இருப்பினும் அபிராமி கவின் குறித்து சக போட்டியாளர்கள் மத்தியில் புலம்பி வருகிறார்.
இந்நிலையில் சமீபத்தில் யூடியூப் சேனல் ஒன்றிற்கு பேட்டியளித்த அபிராமியின் அம்மாவிடம் இந்த காதல் விவகாரம் குறித்து கேட்டபோது, அவர் க்ரஸ் யார் மேல் வேண்டுமானாலும் வரலாம். லவ்வில் கூடநிறைய வித்தியாசம் உள்ளது. நாயைக்கூடத்தான் லவ் பண்ணலாம் என்று பேசியுள்ளார். இதனை கேட்ட கவின் ரசிகர்கள் கோபம் அடைந்துள்ளனர்.
Advertisement
Advertisement