சினிமா

பிக்பாஸ் சீசன் 4ன் டைட்டில் வின்னர் இவர் தானா! சூப்பர் ஸ்டாரின் கையால் பரிசு! சர்ப்ரைஸில் ரசிகர்கள்!

Summary:

தெலுங்கு பிக்பாஸில் அபிஜித் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டு அவருக்கு நடிகர் சிரஞ்சீவி கையால் வெற்றித்தொகை அளிக்கப்பட்டது.

பிக்பாஸ், ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்று பெருமளவில் ரசிக்கப்பட்ட நிகழ்ச்சி. இதற்கென ஏராளமான ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. இந்த நிகழ்ச்சி தமிழில் விஜய் தொலைக்காட்சியில் நாளுக்கு நாள் அன்பு, அக்கறை, காதல், வாக்குவாதங்கள், மோதல்கள் என சூடுபிடிக்க நடைபெற்று வருகிறது. நடிகர் கமல் அதனை தொகுத்து வழங்கி வருகிறார்.

அதனை போலவே தெலுங்கிலும் பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு  ஆரம்பமானது. மேலும் அதன் நான்காவது சீசன் 16 போட்டியாளர்களுடன் கடந்த செப்டம்பர் மாதம் 6 ஆம் தேதி தொடங்கி நாளுக்கு நாள் மிகவும் விறுவிறுப்பாகவும், பரபரப்பாகவும் நடைபெற்று வந்தது. பல சுவாரஸ்யங்களுடன் சென்ற இந்த இந்த நிகழ்ச்சியை நடிகர் நாகார்ஜூனா தொகுத்து வழங்கி வந்தார். 

இந்த நிலையில் தெலுங்கில் பிக்பாஸ் சீசன் 4 100  நாட்களை கடந்த நிலையில் நேற்று பிரமாண்டமாக ஃபைனல் நடைபெற்றது. அதில் அபிஜித் பிக் பாஸ் சீசன் 4ன் டைட்டில் வின்னராக அறிவிக்கப்பட்டார். அதனை தொடர்ந்து அபிஜித்திற்கு தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவியின் கையால் பிக்பாஸ் கோப்பை வழக்கப்பட்டு, வெற்றி தொகையாக ரூ. 25 லட்சமும் வழங்கப்பட்டுள்ளது.இதனால் அவரது ரசிகர்கள் பெரும் உற்சாகம் அடைந்துள்ளனர்.


Advertisement