சனம் சொன்ன வார்த்தையால், தலைக்கேறி கன்பெஷன் அறைக்குள் பயங்கர கோபத்தில் இருந்த ஆரி! வைரலாகும் பரபரப்பு வீடியோ!

சனம் சொன்ன வார்த்தையால், தலைக்கேறி கன்பெஷன் அறைக்குள் பயங்கர கோபத்தில் இருந்த ஆரி! வைரலாகும் பரபரப்பு வீடியோ!


aari-getting-angry-by-sanam-shetty

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்ற பிக்பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசன் மிகவும் விறுவிறுப்பாகவும், பரபரப்பாகவும் சென்று 50 நாட்களை கடந்துள்ளது. மேலும்  தற்போது பிக்பாஸ் வீட்டில் 14 போட்டியாளர்கள் உள்ளனர். வார இறுதியான நேற்று சுசித்ரா பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார்.

அதனைத் தொடர்ந்து இன்றைய நாளிற்கான முதல் ப்ரமோ வைரலாகி வருகிறது. அதில் இந்த வாரத்திற்கான நாமினேஷன் நடைபெறுகிறது.அப்பொழுது ஆரி கன்பெக்ஷன்  அறைக்குச் செல்லும்போது, சனம், ஒரு நிமிடத்தில் வந்துவிடுவார் என  கூறுகிறார். உடனே செம கோபமடைந்த ஆரி நீங்க யாருமே இங்கு பேசுவது இல்லையா? விமர்சனம் செய்யாதீங்க என கடுமையாக கூறிவிட்டு உள்ளே செல்கிறார். 

மேலும் அறையின் உள்ளேயும் தான் கோபமாக உள்ளதாக ஆரி பிக்பாஸிடமே தெரிவிக்கிறார்.
அதனைத் தொடர்ந்து நாமினேஷன் நடைபெற்ற நிலையில் சோம், ஆரி,  ரமேஷ், பாலா, அனிதா, சனம், நிஷா ஆகியோர் நாமினேட் செய்யப்பட்டுள்ளதாக பிக்பாஸ் அறிவித்துள்ளார்.