சினிமா

அடஅட.. பிக்பாஸ் ஆரிக்கு அடுத்தடுத்தாக அடித்த அதிர்ஷ்டம்! செம சர்ப்ரைஸில் ரசிகர்கள்! என்ன தெரியுமா?

Summary:

பகவான் படத்தை தொடர்ந்து பிக்பாஸ் ஆரி நடித்துள்ள அலேகா திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.

பிக்பாஸ் சீசன் 4 , 85 நாட்களை கடந்து நாளுக்கு நாள் விறுவிறுப்பாகவும், பரபரப்பாகவும் சென்று கொண்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் இதுவரை ரேகா, வேல்முருகன், சுரேஷ் சக்கரவர்த்தி,சுசித்ரா, சம்யுக்தா,சனம் ஷெட்டி, ஜித்தன் ரமேஷ், நிஷா, அர்ச்சனா மற்றும் கடந்தவாரம் அனிதா சம்பத் ஆகியோர் வெளியேறியுள்ளனர். இன்னும் ஒரு சில வாரங்களில் நிகழ்ச்சி முடிவடையவுள்ளது

பிக்பாஸ் சீசன் 4  நிகழ்ச்சியின் முக்கிய போட்டியாளர்களுள் ஒருவர் ஆரி. இவர் ரெட்டை சுழி,  நெடுஞ்சாலை, மாயா, நாகேஷ் திரையரங்கம் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். மேலும் இவர் பல சமூக சேவைகளையும் மேற்கொண்டு வருகிறார். இவர் பிக்பாஸ் வீட்டில் அனைத்து போட்டியாளர்களிடமும் வெளிப்படையாக பளீரென பேசுவது, அறிவுரை வழங்குவது என இருப்பதால் அவரை அனைவரும் விரோதிகள் போல பார்க்கின்றனர். மேலும் இவரை ஒவ்வொரு வாரமும் நாமினேட் செய்கின்றனர். ஆனால் அவருக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. ரசிகர்கள் அவருக்கு வாக்களித்து ஒவ்வொரு வாரமும் காப்பாற்றி வருகின்றனர்.

இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஆரி நடித்துள்ள பகவான் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் பிக்பாஸ் வீட்டில் அனைத்து போட்டியாளர்கள் முன்பும் வெளியிடப்பட்டது. அடுத்த சில நாட்களிலேயே ஆரியின் அடுத்த படமான அலேகா படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது. இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக பிரபல பிக்பாஸ் சீசன் 2 நடிகை ஐஸ்வர்யா தத்தா நடித்திருக்கிறார். மேலும் இதன் ட்ரைலர் விரைவில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


 


Advertisement