சினிமா

32 வயதில் காமெடி நடிகை ஆர்த்தி செய்த காரியம்..! சபாஷ்..! வாழ்த்து கூறும் ரசிகர்கள்..!

Summary:

Aarathi

தமிழ் சினிமாவில் வடிவேலு விவேக் போன்ற முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து, காமெடி காட்சிகளில் கலக்கியவர் காமெடி நடிகை ஆர்த்தியின். அதன் பின்னர் முன்னணி நகைச்சுவை நடிகைகளில் ஒருவரானார் ஆர்த்தி. விஜய், அஜித், தனுஷ் என தமிழ் சினிமா பிரபலங்களின் படங்களில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் ஆர்த்தி. இவருக்கென ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர்.

இவர் சினிமாவை தாண்டி பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் ஒன்றில் கலந்துகொள்ளும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது. தனக்கு கிடைத்த வாய்ப்பை மிகச்சரியாக பயன்படுத்திக்கொண்ட ஆர்த்தி போட்டியின் இறுதிவரை சென்று வெளியேறினார்.

இந்நிலையில் தற்போது அவர் கல்லூரியில் கடந்த பிப்ரவரி 29 ம் தேதி முனைவர் பட்டம் பெற்றுள்ளாராம். இந்த புகைப்படத்தை ஆர்த்தி நேற்று வெளியிட்டுள்ளார். அப்புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் தங்கள் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். 


Advertisement