சினிமா

இன்றைய ஐபிஎல் லீக் போட்டிக்காக செம எதிர்பார்ப்புடன் காத்திருக்கும் விஜய்சேதுபதி ரசிகர்கள்! எதனால் தெரியுமா? வெளியான மாஸ் தகவல்!

Summary:

இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்று படமான 800வின் ஃபர்ஸ்ட் லுக் மோஷன் போஸ்டர் இன்று வெளியாகிறது.

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் முத்தையா முரளிதரன் வாழ்க்கை  வரலாறு படமாக உருவாகி வருகிறது. இதில்  முரளிதரன் கதாபாத்திரத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடித்துள்ளார். முரளிதரன் 33 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 800 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.  அதனால் இப்படத்திற்கு 800 என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. 

800 படத்தை எம்.எஸ்.ஸ்ரீபதி  இயக்கியுள்ளார். தார் மோ‌ஷன் பிக்சர்ஸ் நிறுவனத்துடன் இணைந்து ராணா இப்படத்தை தயாரிக்கிறார்.  இந்த திரைப்படம் தமிழில் எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் முரளிதரனின் புகழால் இப்படம் இந்தி, சிங்களம். வங்காளம் போன்ற மொழிகளில் டப்பிங் செய்யப்பட உள்ளது.

இந்நிலையில், இப்படத்தின் பர்ஸ்ட் லுக் மோஷன் போஸ்டர் இன்று மாலை 6 மணிக்கு வெளியாக உள்ளது. இதனை இன்றைய ஐபிஎல் லீக் போட்டிக்கு முன் முத்தையா முரளிதரனும், விஜய் சேதுபதியும் சேர்ந்து  வெளியிடுகிறார்கள். இதனை காண விஜய் சேதுபதி ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர்.


Advertisement