சினிமா

தானே விரும்பி அந்த ரோலில் நடிக்கும் விஜய்-என்ன ரோல் தொரியுமா?

Summary:

விஜய் 63

நடிகர் விஜய் நடிக்கும் ‘தளபதி 63’ படம் பற்றி தினம் ஒரு செய்தி வெளியாகிக் கொண்டிருக்கிறது.

இந்தப் படத்தை இயக்குநர் அட்லீ இயக்குகிறார். இதில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். மேலும் இந்துஜா, கதிர், விவேக் உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.

இந்நிலையில், தற்போது விஜய் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும் விதமாக ’தளபதி 63’ படத்தைப் பற்றி ஒரு புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

இப்படத்தில் விஜய் இரட்டை வேடம் என்று நேற்று ஒரு தகவல் வந்தது.இதுக்குறித்து விசாரிக்கையில் இவை அப்பா-மகன் கதாபாத்திரமாம், அப்பாவின் கதாபாத்திரத்திற்கு வேரு ஒரு நடிகரை அனுக, ஆனால், விஜய்க்கு அந்த கதாபாத்திரம் மிகவும் பிடித்ததாம்.

அதனால், அவரே நடிக்கின்றேன் என கூறி நடித்துள்ளதாக கூறப்படுகின்றது. மேலும் இதற்கான படபிடிப்பு தற்போது சென்னையில் நடந்து வருகிறதாம்.
மேலும் இப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்ப்பார்ப்பில் உள்ளது.


Advertisement